திரையரங்க டிக்கெட் விலையை உயர்த்த பிரபல தயாரிப்பாளர் எதிர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்கு டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மனு அளித்த நிலையில் திரையரங்கு டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் உள்துறை செயலாளர் அமுதா அவர்களிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் மல்டிபிளெக்ஸ் ஏசி தியேட்டரில் 150 ரூபாய் கட்டணத்தில் இருந்து 250 ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏசி அல்லாத மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரூ.150 கட்டணம் என உயர்த்த வேண்டும் என்றும் நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள ஏசி தியேட்டர்களில் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐமேக்ஸில் 450 ரூபாய் கட்டணம் என்றும் EPIQ தியேட்டரில் 400 ரூபாய் கட்டணமாக உயர்த்த வேண்டும் என்றும் சாய்வு இருக்கை கொண்ட தியேட்டரில் 350 ரூபாய் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரையரங்கு உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே திரையரங்குகளுக்கு வருபவர்கள் விலைவாசி உயர்வு காரணமாக ஹோம் தியேட்டர்களில் புகுந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் டிக்கெட் விலையை உயர்த்தினால் மக்கள் படம் பார்க்க எப்படி வருவார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திரையரங்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் சிறிய படங்களை என்ன ஆகும்? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அரசும் திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருவோர்களை பற்றி நினைத்து பார்த்து இதை தவிர்க்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments