'மாநாடு' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம், தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பிற்கும் நல்ல லாபத்தை கொடுத்தது .
சிம்பு, வெங்கட் பிரபு ஆகிய இருவருக்குமே இந்த படம் அவர்களுடைய திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
’மாநாடு’ திரைப்படத்தின் மொத்த வசூல் ரூபாய் 117 கோடி என்றும் கடந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படம் என்றும், இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் தனது நன்றி என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்
Glad to announce that our #Maanaadu has collected 117Cr at Worldwide Box Office. It becomes this year's Mega Blockbuster. I thank @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr @kalyanipriyan @Cinemainmygenes @Richardmnathan @silvastunt @UmeshJKumar @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) May 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments