'வணங்கான்' படத்தின் முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்.. என்ன சொல்லியிருக்கார்?

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

பாலா இயக்கத்தில் உருவான ’வணங்கான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘வணங்கான்’ படத்தை சிறிது நேரத்திற்கு முன் பார்த்து நான் பேச்சு மூச்சின்றி இருக்கிறேன். இயக்குனர் பாலாவின் ஒரு பிரம்மாண்டமான மறுபிரவேச படம். இப்படி ஒரு படத்தை எடுத்து கொடுத்த பாலா அண்ணனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இயக்குனர் வித்தை பல இடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது.

அருண் விஜய் ஒரு இணையற்ற நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினர்களும் நம்ப முடியாத ஒரு மேஜிக்கை உருவாக்கி உள்ளனர். மனதை தொடும் வகையில் ஒரு நல்ல படத்தை பரிசளித்த படக்குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.