ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும்.. 'தங்கலான்' குழுவினருக்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்கார் கதவை தட்டட்டும் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும்.
அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்.
மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள். எப்போதும் நல்ல படங்களுக்கு தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார். நாயகன் விக்ரம். தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும். வாழ்த்துகள்.
எப்போதுமே தன் பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமைய மெனக்கிடுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது மற்றுமொரு தளத்திற்கு அவரை அழைத்துச் சொல்லும். பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கு வசூலை உலக ரீதியாக பெருக்கித் தரும் படமாக அமையும்.
நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.
மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும்.
— sureshkamatchi (@sureshkamatchi) August 14, 2024
அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத்… pic.twitter.com/HKF7ZcPQZu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments