ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும்.. 'தங்கலான்' குழுவினருக்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,August 14 2024]

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்கார் கதவை தட்டட்டும் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும்.

அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்.

மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள். எப்போதும் நல்ல படங்களுக்கு தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார். நாயகன் விக்ரம். தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும். வாழ்த்துகள்.

எப்போதுமே தன் பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமைய மெனக்கிடுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது மற்றுமொரு தளத்திற்கு அவரை அழைத்துச் சொல்லும். பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கு வசூலை உலக ரீதியாக பெருக்கித் தரும் படமாக அமையும்.

நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.

More News

ராமாயணம், மகாபாரதம் மற்றும் இசையின் ஆன்மீக உறவு!-ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர்:

பிரபல ஆன்மீக உபன்யாசகர் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இசை ஆகியவற்றின் ஆன்மீக உறவைப் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

'இந்தியன் 2' படத்தை அடுத்து ஓடிடியில் இன்னொரு கமல் படம்.. தேதி அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில்  வெளியான நிலையில் தற்போது அவரது இன்னொரு திரைப்படமான 'கல்கி 2898ஏடி'  திரைப்படத்தின்

போர் செல்லும் வீரன், ஒரு தாய் மகன் தான்.. 'அமரன்' டிரைலர் ரிலீஸ்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உருவான 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும்

தளபதி விஜய்யின் 'கோட்' டிரைலர் தேதி.. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி

தங்கலான் புரமோஷனுக்கு  சிவப்பு நிற ஆடையில் வரும் மாளவிகா மோகனன்... காரணம் தெரியுமா?

மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட