இதை கட்டாயமாக்கினால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருவது தமிழக அரசையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கொரோனாவை கட்டாயப்படுத்த சர்ஜிக்கல் மாஸ்க்கை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அதுவே தீர்வாக இருக்க முடியும் என நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: முழு ஊரடங்கிற்குப் பின்னும் கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் என்.95 மாஸ்குகள் மற்றும் சர்ஜிக்கல் மாஸ்குகள் 95% வரை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றும் ஆனால் துணியால் செய்யப்பட்ட மாஸ்குக்கள் மற்றும் ஸ்பாஞ்ச் மாஸ்குக்கள் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தாது என்றும் அந்த மாஸ்க் அணிந்து வேஸ்ட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு அனைவருக்கும் சர்ஜிக்கல் மாஸ்க் கிடைக்க வழிவகை செய்யுமா? அனைவரும் வாங்கும் வகையில் விலை குறைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.