கார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் திடீரென கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் ’கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இந்த படம் சரியான நேரத்தில் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் 90% முடிந்துவிட்டது என்றும், கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் மீதிப்பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் திரையரங்கில்தான் ரிலீஸ் ஆகும் என்றும் ஓடிடி ரிலீஸ் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
#Sulthan 90% shoot & Major edit are over. Looking at the possibilities to finish the balance works beside #COVID19 .This will be one of the biggest production & a complete entertainer from @DreamWarriorpic As you all know.. no plans on the release yet! @Bakkiyaraj_k #JaiSulthan
— S.R.Prabhu (@prabhu_sr) August 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments