விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்: எஸ்.ஆர் பிரபு கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் நுங்கம்பாக்கம் கல்லறையில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் இறுதி சடங்கு செய்யப்படும் இடத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாததால் ஊடகங்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் இறுதி சடங்கு செய்யும் இடத்தின் முன் ஊடகவியலாளர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது
இந்த நிலையில் பிரபலங்களின் துயர நிகழ்வில் ஊடகங்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விஷயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பாகும்.
சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்கிறேன்!
பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்படவேண்டுமென்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிகமுக்கியமான பொறுப்பாகும். சமீபத்திய இரு…
— SR Prabu (@prabhu_sr) September 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com