நடிகர் விமல் மீது மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் கைது: மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,April 26 2022]

நடிகர் விஷால் மீது பணமோசடி புகார் அளித்த ‘மன்னார் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விமல் மீது புகார் அளித்த மேலும் இருவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விமல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் கோபி என்பவர் 5 கோடி ரூபாய் மோசடி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து நடிகர் விமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது புகார் அளித்தார். ஆனால் விமல் அளித்த புகார் பொய்யானது என்றும் விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிங்காரவேலன் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் ’மன்னார் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலனை சென்னை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி விமல் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.