இனி யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன்: பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,May 07 2022]

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது பல யூடியூப் சேனல்கள் திரையுலக பிரபலங்களின் பேட்டிகள் எடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன என்பதும் அவை நல்ல அளவில் ரீச் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் யூடியூப் சேனல்களுக்கு கடந்த சில மாதங்களாக பேட்டி அளித்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி திரைப்பட இசை வெளியிட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பரபரப்பாக பேசி வருகிறார் என்பதும் தெரிந்ததே. பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விமர்சனம் செய்யும் வகையில் பேசுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன், இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன் என்றும், ஆனால் அந்த பணத்தை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.