ஃபைனான்சியர் போத்ராவின் பகல் கொள்ளை ஃபார்முலா
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கைதான சினிமா ஃபைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் இதுவரை அவரால் பாதிக்கப்பட்ட பல சினிமா பிரபலங்கள் தற்போது தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே கூற துணிந்துள்ளனர்.
போத்ராவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் கூறுவதில் இருந்து போத்ராவின் பகல்கொள்ளை பார்முலா ஒன்று வெளியே தெரிய வந்துள்ளது. அந்த பார்முலாவின்படி போத்ரா முதலில் கடன் கொடுக்கும்போது பிளாங் செக் வாங்கி கொள்வார். பின்னர் அவராகவே ஒரு பெரிய தொகையை அதில் எழுதி வங்கியில் போடுவார். அந்த செக் திரும்பி வந்துவிடும். அதன் பின்னர் செக் மோசடி வழக்கு போடுவார். பொதுவாக பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் அடிக்கடி கோர்ட் வாசலை மிதிப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால், வேறு வழியின்றி போத்ராவிடம் சமாதானம் பேசி அவர் கேட்கும் தொகையை கொடுத்துவிடுவார்கள் இதுதான் போத்ராவின் ஃபார்முலா.
பிரபல தயாரிப்பாளர் சதீஷ்குமார் தனது அனுபவம் குறித்து கூறியபோது, "நான் அவர்கிட்ட வாங்கின கடன் 15 லட்சம் ரூபாய்தான். அதுக்கு வட்டி மட்டுமே 15 லட்சம் கொடுத்துட்டேன். 1 கோடி ரூபாய்க்கு செக் போட்டு பெளன்ஸ் ஆக்கி, என்மேல வழக்கு போடுவேன்'னு சொன்னார். நியாயம் கேட்க வீட்டுக்குப் போனேன். சந்திக்க முடியலை. தவிர, சினிமா துறைக்குள்ள நான் அவருக்கு 4 1/2 கோடி ரூபாய் கடன் பாக்கி தரவேண்டி இருக்குனு வதந்தி பரப்பினார். போத்ராகிட்ட நியாயம்னு ஒண்ணு கிடையாது. நாம குனியக் குனியக் குட்டிக்கிட்டே இருப்பார். இனியும் பொறுக்காம, சட்டத்தை நோக்கிப் போவோம்னுதான் போலீஸ்கிட்ட புகார் கொடுத்தேன்'' என்று கூறுகிறார்.
சினிமா பிரபலங்களிடம் மட்டுமின்றி தொழிலதிபர்கள், சிறு சிறு முதலாளிகளையும் போத்ரா விட்டு வைக்கவில்லை. அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கே ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக மடும் 2 3/4 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போத்ராவின் இந்த பார்முலா விரைவில் திரைப்படமாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. தன் மீதான இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போத்ரா வெளியே வந்து என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments