பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்: அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகையின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் சினிமா தயாரிப்பாளருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென தயாரிப்பாளருடன் நடிகை இருந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அந்த தயாரிப்பாளர் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து அந்த நடிகை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளரை தான் முழுவதுமாக நம்பியதாகவும் இதன் காரணமாக அவருடைய படத்தில் நடித்ததாகவும் ஆனால் நடித்ததற்கு சம்பளம் கூட தனக்கு தரவில்லை என்றும் தற்போது தங்களுடைய உறவு மோசமாக இருப்பதை அடுத்து தன்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com