close
Choose your channels

கல்லா கட்டியது 'வாரிசு' தான், ஆனால் 'துணிவு'.. தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொங்கல் விருந்தாக வெளியாகிய விஜய்யின் ’வாரிசு’ மற்றும் அஜித்தின் ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் எந்த படம் நன்றாக இருந்தது? எந்த படம் அதிக வசூல் செய்தது? என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ’வாரிசு’ திரைப்படத்திற்கு தான் அதிக வசூல் என்றும் ஆனால் ’துணிவு’ கண்டன்ட் அளவில் சிறப்பான படம் என்று பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

’வாரிசு’ திரைப்படம் இந்த கண்டம் மட்டுமின்றி எல்லா கண்டதிலும் வசூலில் முதல் இடத்தில் உள்ளது என்றும் ’துணிவு’ அதற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் அந்த திரைப்படம் கன்டென்ட் ரீதியில் மிகச்சிறந்த படம் என்றும் அஜித்துக்கும், எச். வினோத்துக்கும் ஒரு மிகச்சிறந்த கம்பேக் படம் என்றும் அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றும் ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் என்ற ஒரு பெரிய ஆளுமைக்கு இன்னும் நன்றாக சூப்பரான படத்தை கொடுத்திருக்கலாம் என்றும் ’வாரிசு’ படத்தின் மீதான விமர்சனங்களுக்கு முழு பொறுப்பு இயக்குனர் வம்சி மட்டுமே என்றும் அவர் கூறினார். ’துணிவு’ படம் அளவுக்கு விஜய்யும் இந்த முறை ஒரு பக்கா ஆக்சன் படத்துடன் வந்திருந்தால் நிலைமையை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரின் முழு பேட்டியின் வீடியோ இதோ..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment