வெற்றிகரமாக 100வது நாள்: ரவீந்தரின் நெகிழ்ச்சி பதிவு!
- IndiaGlitz, [Sunday,December 11 2022]
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து 100 நாள் ஆனதை அடுத்து இது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளார்.
பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி விஜே மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரவீந்திரன் - மகாலட்சுமி தம்பதிகள் சந்தோஷமாக இருந்தனர் என்பது அவர்களது பேட்டிகள் மற்றும் புகைப் படங்கள் வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது.
இந்த நிலையில் திருமணமாகி இன்றுடன் 100 நாள் ஆனதையடுத்து தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் கூடிய பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘100 நாட்கள் முடிந்தது.. இந்த 100 நாள் பதிவுக்கு ஒரு நல்ல தலைப்பு எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். ஆனால் என்னால் நாடகமாக எழுத முடியவில்லை. நான் நினைப்பதை எழுதுபவன். 30 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு நொடியும் இந்த 100 நாட்களில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அதே அன்பு அதே அக்கறை வேடிக்கை சண்டை என என்னை நகர்த்திக் கொண்டே இருங்கள், உங்களால் நான் சந்தோசமாக இருக்கின்றேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த பதிவும், பதிவுடன் கூடிய புகைப்படமும் வைரலாகி வருகிறது.