மனைவியை 'சாப்பாட்டு பக்கி' என கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னையும் தனது மனைவியையும் சாப்பாட்டுப் பக்கி எனக் கூறி பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவீந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட பின் இருவரும் பல பொது இடங்களுக்கு சென்று வருகின்றனர் என்பதும் அதேபோல் சமூக வலைதளங்களிலும் இருவரும் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னரும் மகாலட்சுமி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி கணவரின் தயாரிப்பு நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மனைவியுடன் ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சாப்பாட்டு பக்கிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கை சிறப்பாக அமைய தன்னுடைய மனைவியின் முகத்தில் காணப்படும் புன்னகை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மகாலட்சுமி ’என்னுடைய புன்னகைக்கு காரணமே நீங்கள் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் புகழ்ந்து கொண்ட இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.