திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. மனைவி மகாலட்சுமிக்கு விலை மதிப்பில்லா பரிசு கொடுத்த ரவீந்தர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.
சமீபத்தில் திருமணம் ஆகி 100 நாள் கொண்டாட்டத்தை இருவரும் கொண்டாடிய நிலையில் தற்போது திருமணத்திற்கு பின்னர் மகாலட்சுமியின் முதல் பிறந்தநாளுக்கு விலை மதிப்பில்லா பரிசை ரவீந்திரன் தனது மனைவி மகாலட்சுமிக்கு கொடுத்து உள்ளார். அந்த விலைமதிப்பில்லா பரிசு ஒரு முழம் மல்லிகை பூ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.
பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.
நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.
மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான்.
இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான்.
I love you mahalakshmi
Happy birthday
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com