'தக்லைஃப்' படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த பிரபலம்..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அது குறித்த வீடியோவும் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது தயாரிப்பில் உருவாக இருந்த ’கொரோனா குமார்’ என்ற படத்தில் ஒப்புக்கொண்டபடி சிம்பு நடித்து முடிக்கவில்லை என கூறியுள்ள ஐசரி கணேஷ் ’கொரோனா குமார்’ படத்தை முடிக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும், எனவே கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ’கொரோனா படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது ’கொரோனா குமார்’ படத்தை முடிக்காமல் சிம்பு வேறு படத்தில் நடிக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்ட் போடப்பட்டுள்ள நிலையில் சிம்பு எப்படி நடிக்கலாம் என்றும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் கடிதம் எழுதியுள்ளார். ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்த இரண்டே நாட்களில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு கமல் மற்றும் மணிரத்னம் தரப்பிலிருந்து என்ன பதில் கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

'வானத்தை போல' சீரியல் நடிகைக்கு திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' என்ற சீரியல் நடிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.

என் கையில் தாமரை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.. நடிகை நமீதா பேட்டி..!

நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கையில் தாமரை வைத்துக் கொண்டு பேட்டி அளித்த நிலையில் கையில் ஏன் தாமரை பூவை வைத்திருந்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இன்று அட்சய திருதியை.. தங்கம் வாங்க முடியாதவர்கள் எதை வாங்கினால் செல்வம் சேரும் தெரியுமா!

செல்வம் செழிப்போடு வாழ வழிவகுக்கும் அக்ஷய திருதியை இன்று (மே 10, 2024) நாள் கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்குவது தான் இந்த நாளின் சிறப்பம் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும்

விரைவில் நாம் சந்திப்போம்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி சொன்ன விஜய்..!

10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட 92 சதவீதம்

இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள்.. சூர்யா பரிந்துரைத்த இன்று ரிலீசான படம்..!

இன்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பரிந்துரை செய்துள்ளார்.