சிம்புவின் அம்மா சொல்வது 100% பொய்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தால் பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த பிரச்சனை குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அந்த வீடியோவில் அவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் சிம்புவுக்கு ரூபாய் 3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டும் என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய போது ’மூன்று கோடி ரூபாய் சம்பளம் என்று உஷா ராஜேந்தர் கூறுவது 100% பொய் என்றும் அவருக்கு 75 லட்சம் ரூபாய் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் சிம்பு தனக்கு ஒரு திரைப்படம் நடித்து தருவதாக கூறி இருந்தார் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கொடுத்தால் அந்த 75 லட்சம் ரூபாயை நான் தருவதாக கூறி இருந்தேன் என்றும், ஆனால் இன்றுவரை அவர்கள் ஒப்பந்தம் தரவில்லை என்றும் கூறினார்
மேலும் செக் பவுன்ஸ் ஆனதற்காக மறுநாள் நான் அதே தொகைக்கு டிடி எடுத்து கொடுத்து விட்டேன் என்றும் இன்றுவரை அவர்கள் அந்த செக்கை என்னிடம் திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களின் முழு பேட்டி இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com