தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான KB films பாலு அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சின்ன தம்பி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் KB Films பாலு என்பதும் அவர் விரைவில் விஷால் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

KB films பாலு அவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் காலை 9 மணிக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த மலர் மருத்துவமனை அருகே திரையுலகினர் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவிற்கும் வந்துவிட்ட மர்மத்தூண்? தொடரும் பீதி…

உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக, ஆள்நடமாட்டமே இல்லாத இடங்களில் திடீரென உலோகத்தூண் தோன்றுவதும் பின்னர் அது காணாமல் போவதும் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

மன்னிப்பு விவகாரம்: இந்த வாரம் பாலாவுக்கு ஒரு குறும்படம் இருக்கு!

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஆரி மற்றும் பாலாஜி இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் இந்த வாக்குவாதத்தின் போது பாலாஜியை ஆரி சோம்பேறி என்று ஒரு வார்த்தை கூறி விட்டார்

'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகத்தில் ஒரு சர்ப்ரைஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சோழப்பேரரசின் கதை 'ஆயிரத்தில் ஒருவன்' என்பதும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பூமி' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது

இரண்டே வார்த்தை: விஜய்யின் டுவிட்டுக்கு ஆயிரக்கணக்கில் குவியும் லைக்ஸ்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன