எனக்கே இந்த விஷயம் தெரியாதே: 'ருத்ரன்' ரிலீஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர் டுவிட்!

  • IndiaGlitz, [Sunday,January 23 2022]

நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில் ’இந்த விஷயம் எனக்கே தெரியாதே’ என இந்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி பொது தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அல்லது தள்ளி போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ‘ருத்ரன்’ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக இணையதளங்களில் சில தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த தகவல் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கதிரேசன் ’இந்த தகவல் எனக்கே தெரியாது’ என்று தெரிவித்துள்ளதை அடுத்து ஓடிடி ரிலீஸை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், ராஜசேகரின் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களே இயக்கியுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.