தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தயாரிப்பாளர் தாணுவின் தாராள உதவி

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் கூட்டமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது. இந்த சங்கத்திற்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டிடத்திற்காக திரையுலகினர் பலர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் புதிய கட்டிடத்திற்காக ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் துணைத்தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.