நடிகர் சங்கத்தில் புகுந்த காளான் தான் விஷால். கலைப்புலி எஸ்.தாணு தாக்கு

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் நான்கு அணி போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக டி.சிவா அணி, வாபஸ் பெற்று ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த பின்னர் கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது:

நடிகர் சங்கத்தை இதுவரை நான் தவறாக சொன்னதே இல்லை. இனியும் எந்த எந்த காலத்திலும் தவறாக சொல்லமாட்டேன். ஆனால் அப்படிப்பட்ட நடிகர் சங்கத்தில் ஒரு காளான் புகுந்துவிட்டது. அவர்தான் விஷால். அவரிடம் ஆணவம், மமதை அதிகமாக உள்ளது. அவருடைய பேச்சும், அணுகுமுறையும் தவறாக உள்ளது

விஷால் அணியில் இருக்கும் கவுதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஒரு கோடி ரூபாய் கொடுத்தது நான். இதை கவுதம் மேனனிடம் விஷால் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் விஷால் நடித்த 'பாயும் புலி' படத்திற்கு இதேபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது அவர் ஓடி ஒளிந்து கொண்டார்.

இன்று ஓட்டு கேட்டு பல தயாரிப்பாளர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் அவரை வைத்து படம் தயாரித்த எந்த தயாரிப்பாளர் வீட்டுக்காவது விஷால் செல்வாரா? அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களும், அவருடைய படத்துக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

ஞானவேல்ராஜாவின் பல பிரச்சனைகளை தீர்த்தது தயாரிப்பாளர் சங்கம்தான். அதேபோல் ஆந்திராவில் நிறைய முறை ரெட் கார்டு வாங்கிய பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி குறை சொல்லும் முன் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துவிட்டு பின்னர் பேச வேண்டும்.

நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் இலவசமாக நடிப்போம் என்று கூறிய நடிகர்களான விஷால், ஆர்யா, ஜீவா உள்பட அனைவரும் அதற்கு பின்னர் பல படங்கள் நடித்துவிட்டார்கள். ஆனால் நடிகர் சங்கத்திற்காக நடிப்பதாக கூறிய படம் என்ன ஆனது? கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்று விஷால் தம்பி கூறுகிறார். அவருடைய வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கலைப்புலி தாணு பேசினார்.

More News

பாலியல் குறித்து பேச ஏன் வெட்கபட வேண்டும்? 'கபாலி' நாயகி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் 'பாலியல் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேச நமது நாட்டினர் வெட்கப்படுகின்றனர். மனித உடல் குறித்து பேசுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப

ரஜினி ஆதரவு டுவீட்டுக்கு தமிழிசை செளந்திரராஜன் அதிரடி பதில்

ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கை அமரன், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

ஒரே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற டி.ராஜேந்தர்-சிம்பு

பிரபல இயக்குனரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தரும் அவருடைய மகனும் நடிகருமான சிம்புவும் ஒரே நேரத்தில் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.