விஷால் முயற்சியால் பல பெருச்சாலிகள் மாட்டி கொண்டது: பிரபல தயாரிப்பாளர்
- IndiaGlitz, [Wednesday,April 18 2018]
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பதவியேற்ற பின்னர் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம் அந்த தயாரிப்பாளர் தவிர வேறு பலரும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் விஷாலின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பிரபல தயாரிப்பாளர் J.சண்முகம் என்பவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
இன்றைய தயாரிப்பாளர் சந்திப்பு மற்றும் சங்க செயல் விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நமது இந்த வேலை நிறுத்தம் கியூப் எனும் பெருச்சாலியை அடக்க ஆரம்பித்தோம். இதில் தமிழ்ப் புத்தாண்டு பரிசாக நமக்கு பல பெருச்சாலிகள் கிடைத்தது. திருட்டு கணக்கு காட்டும் தியேட்டர்கார பெருச்சாலி. சிண்டிகேட் பெருச்சாலிகள். போஸ்டர் குறைவாக ஒட்டுவது. புக் மை ஷோ வில் ஒரு டிக்கெட்டில் 30 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த பெருச்சாலிகள். திருட்டுத் தனமாக தியேட்டரில் வீடியோ எடுத்து வெளியிடும் பெருச்சாலிகள். நமது படம் பார்க்க மட்டுமே தியேட்டருக்கு ஜனம் வருகிறது. அதன் மூலமாக விளம்பரத்தை காட்டி ஆண்டுக்கு 325 கோடி சம்பாதிக்கும் பெருச்சாலிகள். அவர்களிடம் கமிஷன் பெற்று தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பெருச்சாலிகள். என பல வகையான பெருச்சாளிகள் மாட்டிக் கொண்டது.
இந்த தவறுகளை நமது தலைவரின் இரும்பு போன்ற மன உறுதியால் கண்டறிய முடிந்தது. இப்படி தட்டிக்கேட்க யாராவது வர மாட்டாங்களா என நான் ஏங்கியதுண்டு. என் படத்தை ரிலீஸ் செய்தேன் ஒன்றுமே வரவில்லை அதிர்ந்துவிட்டேன். அதனாலே அடுத்த படத்தை ரிலீஸ் செய்யாமல் நிறுத்திவிட்டேன். நமக்கு கிடைத்த விஷால் தலைவரை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொண்டாலே நமக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும். யாராவது பிதற்றிக்கொண்டிருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் நாம் நமது பிழைப்பை பார்போம். நம்மீது அக்கரை உள்ள தலைவருக்கு நாம் பலம் சேர்போம். இவரை விட்டால் நமது திரையுலகம் கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார்.