சமூக அக்கறையுடன் இளைஞர்களுக்கு தேவையான படம்: இருட்டு அறையில் முரட்டு குத்து குறித்து பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளிவந்த கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'; திரைப்படம் நல்ல வசூலை பெற்று வந்தாலும் இந்த படத்திற்கு கண்டனங்கள் குவிந்துள்ளது. ஏ சான்றிதழ் படம் என்பதற்காக ஆபாசத்தை இந்த படம் அள்ளி தெளித்துள்ளதாகவும், சமூக அக்கறையின்றி இளைஞர்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த படம் இருப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இயக்குனர் பாரதிராஜாவும் இந்த படத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் 'சமூக அக்கறையுடன் கூடிய இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செய்திகள் அடங்கிய படம் என்றும் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சிறந்த முறையில் சென்சார் செய்த தணிக்கைக்குழு வாரியத்தை வாழ்த்துவதாகவும், நல்ல செய்திகள் அடங்கிய இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கைக்குழு வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கிண்டலுடன் கூறியுள்ளார்.
மேலும் ‘பத்மாவதி’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோது தான் ஆச்சரியப்பட்டதாகவும்,. ஆனால், இப்போதுதான் தெரிகிறது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைவிட ‘பத்மாவதி’ நல்ல படம் இல்லையென்று என்றும், எந்த மாதிரியான படம் எடுக்க வேண்டுமென்று மத்திய தணிக்கைக்குழு வாரியம் இதன்மூலம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிவித்து வழிகாட்டியதற்கு நன்றி” என்றும் சதீஷ்குமார் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments