ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,July 14 2022]

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரத்தை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயாரும் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மனைவியுமான புஷ்பா ஐசரி வேலன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் பல்கலை வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த புஷ்பா ஐசரி வேலனின் கணவரும் நடிகருமான ஐசரி வேலன் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த புஷ்பா ஐசரிவேலன் மகன், ஐசரிகணேஷ் கல்வியாளர் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அசால்ட்டாக 90 கிலோ பளூதூக்கிய சிம்பு பட நடிகை: வீடியோ வைரல்

வெயிட் லிப்டிங் என்று கூறப்படும் பளுதூக்குதலில் அசால்டாக 90 கிலோவை தூக்கிய சிம்பு பட நடிகையின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணத்திற்கு பின் நடிகர் பிரபுவின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பதும், இதில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே 

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் சம்பளம்: விஷால் பட நடிகையிடம் தொழிலதிபர் பேரம்!

தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் மனைவியாக இருக்க மாதம் 25 லட்ச ரூபாய் பேரம் பேசியதாக விஷால், ஜெயம் ரவி படங்களில் நாயகியாக நடித்த நடிகை

சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி திவ்யாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

பெரிய திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பாக தொகுப்பாளினிகளுக்கு என மிகப்பெரிய அளவில் ஒரு

சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது