ஒரு கோடிக்கும் மேல் கொரோனா நிவாரண நிதி கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 25 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் பலர் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக திரையுலகை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரமுகர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது அவருடன் அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ப்ரீத்தா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர், டாக்டர் ஐசரி
— producers council pr news (@TFPCprnews) June 2, 2021
கே.கணேஷ், தனது மனைவி ஆர்த்தி, மகள் பிரீத்தாவுடன் தமிழக முதல்வரை சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு
ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். #IshariKGanesh pic.twitter.com/WhuTizKtMf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout