'வெந்து தணிந்தது காடு' வெற்றி: சிம்பு, கவுதம் மேனனுக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஐசரி கணேஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருசில ஊடகங்கள் கலவையான விமர்சனத்தை இந்த படத்திற்கு கொடுத்த போதிலும் மக்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள் என்பதும் குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்திற்கு குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலீஸான முதல் 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படம் தற்போது மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது என்பதும் இதில் படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கியுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
#Atman @SilambarasanTR_ Producer @IshariKGanesh Director @menongautham and @Siva_Kartikeyan at #VTKSuccessParty#VendhuThanindhathuKaadu @arrahman @VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/S4Wr1qniYy
— Vels Film International (@VelsFilmIntl) September 24, 2022
Producer Dr @IshariKGanesh gifted a Brand New Luxury Car to #Atman @SilambarasanTR_ & Royal Enfield bike to Director @menongautham for the Huge success of #VendhuThanindhathuKaadu at #VTKSuccessParty@arrahman @VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/037UU5j4nH
— Vels Film International (@VelsFilmIntl) September 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com