சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்துவிட்டார்: பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்ததற்காக ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கிற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ’மிஸ்டர் லோக்கல்’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் 11 கோடி ரூபாய் மட்டுமே தரப்பட்டதாகவும், மீதி நான்கு கோடி தரவில்லை என்றும் இந்த பணத்தை பலமுறை கேட்டும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இழுத்தடிப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வருமானவரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் ரூ.11 கோடி சம்பளம் கொடுத்ததற்கான டிடிஎஸ் பத்திரத்தையும் தயாரிப்பாளர் தாக்கல் செய்யவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,’நடிகர் சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்து என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், எனவே அவர் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த வழக்கு மீண்டும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com