ஊரடங்கு நேரத்தில் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்

49 வயதான தில் ராஜு அவர்களின் முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடந்து பேத்தியும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவாகி உள்ளது. இன்று முதல் புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்குவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமணம் அவரது மகள் மற்றும் பேத்தி முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் இருப்பினும் தெலுங்கு திரையுலகில் உள்ள பலரும் தில் ராஜூ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது