தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இரண்டாவது முறையாக இணையும் விஜய்!

  • IndiaGlitz, [Tuesday,March 22 2022]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66 வது படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் இன்னொரு படம் தில்ராஜூவுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததும் என்பதும் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமையை ’தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ரூபாய் 11 கோடிக்கு பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

‘பீஸ்ட்’ வெளியாகும் அதே தினத்தில் ’கேஜிஎப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ‘பீஸ்ட்’ ரிலீஸ் உரிமை தில்ராஜூவிடம் சென்றுள்ளதால் தெலுங்கு மாநிலங்களில் ஏராளமான திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.