சாட்டிலைட் டிவியை அடுத்து விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் தலையிலான இளைஞர் படை பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள், அறிவிப்புகள் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சேட்டிலைட் சேனல்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், இனி அனைத்து திரைப்படங்களுக்கும் உரிய விலை கொடுத்து அந்த சேனல்களிலேயே படங்கள் ஒளிபரப்பாகும் என்றும் விஷால் அறிவித்ததை நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை விஷால் அறிவித்துள்ளார். அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்ப்பில் ஆன்லைன் புக்கிங் இணையதளம் ஒன்று தொடங்கப்படும் என்றும் அதன் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட்டுக்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் தற்போதுள்ள ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.30 கூடுதல் தொகை வசூல் செய்வதாகவும், இனி அதுபோல் நடக்காது என்றும் தயாரிப்பாளரின் இணையதளம் ரூ.10 மட்டுமே வசூல் செய்யும் என்றும் இதனால் டிக்கெட் புக்கிங் செய்யும் ஆடியன்ஸ்களுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.20 மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அதிரடியால் ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout