திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கையின் முழுவிபரம்

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருதை வென்ற கமல்ஹாசனுக்கு எட்டு திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கமல்ஹாசனை பாராட்டியும் வாழ்த்தியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும் எந்நாளும் போற்றுதலுக்குரிய தாங்கள் கலை உலகில் நடிப்புத்துறை மட்டுமின்றி எத்தனை துறைகள் உள்ளதோ அத்தனை துறைகளிலும் வெற்றிக்கொடி கட்டி உலகில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஈடுசெய்து இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதுகளையும் பெற்று உலக நாயகனாக நடிப்புலகில் இமயமாய் விளங்கி கொண்டிருக்கும் தங்களுக்கு உலகளவில் எத்தனையோ விருதுகள் கிடைத்திற்கும் பட்சத்தில் இந்திய திரையுலகமே வியக்கும் வகையில் தற்போது பிரான்ஸ் அரசின் மிகப்பெரிய உயரிய விருதான 'செவாலியே' விருதினை இன்றும் நம்மை விட்டு பிரியா நடிகர், நடிப்பில் சக்கரவர்த்தி நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு பிறகு நடிகர் திலகத்தின் கலைவாரிசான தங்களுக்கு அறிவித்திருப்பது தமிழ்த் திரையுலகினருக்கு மட்டுமின்றி உலக சினிமாத் துறைக்கே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு இதுபோன்று பல விருதுகளும், நற்பெயர்களும் மென்மேலும் கிடைத்திட நமது தமிழ்த் திரைபடத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

இது தந்தை-மகன் உறவு. கமலுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமின்றி உலகில் உள்ள தமிழர்கள்...

சிம்பு, சூர்யா தனுஷ் நடிகை மீது தேச துரோக வழக்கு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நல்ல நாடு என்று பேட்டி ஒன்றில் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

'அஜித் 57' படத்தின் டைட்டில் குறித்த முக்கிய தகவல்

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நாகசைதன்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுதம் மேனன்

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது ஒரு இக்கட்டான நிலை. இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும்...

மதுரைக்கு சிம்பு, காஞ்சிக்கு டி.ஆர்

தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளவுள்ள எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...