தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: தமிழக அரசு அதிரடி
- IndiaGlitz, [Thursday,December 20 2018]
விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருசில தயாரிப்பாளர்கள் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டு போட்டு மூடினர். அந்த பூட்டை இன்று விஷால் உடைக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார் அவருடன் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சற்றுமுன் சீல் வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும் என்று வட்டாட்சியர் ராம்குமார் அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள இருதரப்பினர்களும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வந்த பின்னரே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளதால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.