தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்: விஷால் அவசர ஆலோசனை
- IndiaGlitz, [Sunday,December 10 2017]
தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் கூடியது
நீதிபதி ராமநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கத் தலைவரும், நடிகருமான விஷாலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் இருதரப்பினர்களுக்கும் மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர் விஷால் ஆலோசனை நடத்தி வருவதாகவும், பொதுக்குழுவை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைப்பதா? என்பது குறித்த தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் சேரன், இயக்குனர் டி.ராஜேந்தர், நடிகர் ரத்தீஷ் உள்பட பலர் விஷாலின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்./