விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை திடீரென தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தயாரிப்பாளர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் 5ல் தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்.8 ஆம் தேதி வெளியிடப்படும். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 6 பேரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் வேட்பு மனுவிற்கு ஏதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதால் அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து அவரது மனு பரிசிலிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments