தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 17 2016]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு அவர்களும், செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர்களும், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன் ஆகியோர்களும், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைவதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் 1201 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்த நடிகர் விஷால் சமீபத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய கோலிவுட் திரையுலகினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More News

உடல்நலம் குன்றிய நிலையிலும் பாட்ஷாவை பார்த்த கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் இரண்டாவது முறையாக சென்னை காவேரி மருத்துவமனையில்...

சசிகலா கணவர் நடராஜனின் கொலை மிரட்டல். கராத்தே ஹூசனி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சோலார் பேனல் வழக்கு. பெண் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்

முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டி உள்பட பல விவிஐபிக்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட சோலார் பேனல்...

சசிகுமார் படத்திற்கு கிடைத்த 'பலே' சான்றிதழ்

'கிடாரி' வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்துள்ள 'பலே வெள்ளைத்தேவா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்...

ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு செக் வைத்த மத்திய அரசு

கடந்த மாதம் 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று...