பரோட்டாவிற்கு மாவு பிசையும் டான்ஸ்: புளூசட்டை மாறனின் விமர்சனத்திற்கு தயாரிப்பாளர் கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார் .
ரஜினி, அஜீத், விஜய் உள்பட எந்த பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டும் கொடுப்பதையே ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தையும் அதேபோல் நெகட்டிவ் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அதன் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் புரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார் என்ன பதிவு செய்து இருந்தார்.
அவருடைய இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் கூட கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், ‘படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு கமெண்ட்டை அவர் பதிவு செய்திருப்பது என்னை ஏமாற்றமும் அடையச் செய்தது மட்டுமின்றி கோபமடையும் செய்துள்ளது. இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஒரு நல்ல மனிதராக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒழுக்கமான மனிதராக இருக்க வேண்டும், இதை அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது.
I am very disappointed & angry with this below the belt comment which has nothing to do with the film. It's too personal & absolutely unacceptable from @tamiltalkies ...hope he understands the need be at least a decent human being, if not a good person. #ValimaiBlockbuster ?????? https://t.co/Lcw2iHOhyg
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) February 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments