தமிழ் திரைப்பட ஹீரோ மீது ரூ.5 கோடி மோசடிப்புகார் கொடுத்த தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட ஹீரோ மீது ஐந்து கோடி ரூபாய் மோசடி புகாரை தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்துள்ளதை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகின் ஹீரோக்களில் ஒருவர் விமல் என்பதும் சமீபத்தில் இவர் நடித்த ’விலங்கு’ என்ற தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் ’மன்னார் வகையறா’ என்ற படத்தை விமல் எடுத்த போது தன்னிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வாங்கிய கடனையும் திருப்பி தரவில்லை என்றும் லாபத்தில் பங்கும் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நடிகர் விமல் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனக்கு தரவேண்டிய ஐந்து கோடி ரூபாயை திருப்பி தராமல் இருப்பதோடு பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே விமல் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய 5 கோடி ரூபாயை வசூலித்து தரும்படியும் அந்த புகாரில் தயாரிப்பாளர் கோபி குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments