பேச்சுவார்த்தைக்கு வராத கமல்ஹாசன்.. ரெட் கார்டு கொடுக்க முடிவா? அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

நடிகர் கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ தோல்வி விவகாரம் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசன் மற்றும் அவரது தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என்றும் இதனை அடுத்து அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

திருப்பதி பிரதார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ஒரு திரைப்படத்தில் நடித்து தருவதாக கமல் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த வாக்குறுதியை அவர் ஒன்பது ஆண்டுகளாக காப்பாற்றவில்லை என்றும் எனவே கமல் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் லிங்குசாமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையின் நடத்த முடிவு செய்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரது தரப்பில் இருந்து யாராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கமல்ஹாசன் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் சிலர் கமல்ஹாசனுக்கு ரெட் கார்டு அளிக்க வேண்டும் என்று கூறி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.