இரண்டு தயாரிப்பாளர் சங்கங்களும் இணைகிறதா? முக்கிய அறிக்கை1
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைஉலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் இருந்து வரும் நிலையில் மேற்கண்ட இரண்டு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்கால நலன் கருதி (7.09.2021-அன்று, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் இணைந்த. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட தீாமானம் நிறைவேற்றப்பட்டு ஒரு “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு” அமைக்கப்பட்டது.
இந்த ஐபிசி கமிட்டியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி
1) தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டிற்கு உதவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3) விளம்பர செலவுகளை குறைப்பது குறித்தும், வி.பி.எ.ப். கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடூக்கப்படும்.
4) பெப்சி உடன் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தயாரிப்பாளர்களின் நலனுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் இருமுறை சந்தித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவெடுத்து செயல்படுத்த உறுதி செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout