தயாரிப்பாளர் என்னிடம் தவறாக அணுகினார்: நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே ஸ்ரீரெட்டி கிளப்பிய அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களின் பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை, தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக சாட்டியுள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஆர்.எக்ஸ் 100' என்ற தெலுங்கு படத்தின் நாயகி பயல்ராஜ்புத் அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் ஒரு பிரபல தயாரிப்பாளர் தன்னை அணுகி ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை தனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அதன் பின்னர் அந்த தயாரிப்பாளர் இந்த படத்தில் நடிக்க வேண்டுமானால் தன்னை திருப்தி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், இதனை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்து அவருக்கு ஆத்திரத்துடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com