திருமணம் செய்து கொள்வதாக  நடிகையை ஏமாற்றிய தயாரிப்பாளர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் ’விஷன் 2023’ என்ற படத்தை தயாரித்து நடித்தவர் ஹர்ஷவர்தன். இவர் சக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த நடிகை பலமுறை திருமணம் செய்ய வலியுறுத்திய போதும் அவர் திருமணத்தைத் தவிர்த்து வந்ததாகவும், இறுதியில் உன்னை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியதை அடுத்து அதிர்ச்சி அடைந்த நடிகை காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையின் புகாரை அடுத்து ஹர்ஷவர்தன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய நடிகர்-தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விரைவில் உன்னை சந்திக்கின்றேன்: மறைந்த தோழிக்கு உருக்கமான பதிவு செய்த யாஷிகா!

விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன் என மறைந்த தோழிக்கு உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவை நடிகை யாஷிகா செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நாளை மறுநாள் திருமண தேதியை அறிவிக்கின்றாரா சிம்பு?

 நடிகர் சிம்பு நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் புதிய லுக்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக செய்திகள் வெளியானது.

எனக்கு இல்லைன்னா எல்லாரும் சாவட்டும்: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சுறுசுறுப்பாகி உள்ளது .

சொந்த பிராண்ட்டை மிஞ்சிய சிஎஸ்கே… இந்தியாவில் முதல் வரலாற்று சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குச் சந்தை மூலதனம் அதன்