விஜய்யின் அரசியல் வருகை.. அர்ச்சனா கல்பாத்தியின் வாழ்த்து என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அவரது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ’கோட்’ படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்களும் தனது சமூக வலைதளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கட்சியின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி இரண்டு கட்சிகளே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விஜய் அரசியல் கட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தான் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவந்தவுடன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர்அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் ’நீங்கள் எப்போதும் எங்களை உயர்த்துவதற்காகவும், முன்னேற்றுவதற்காகவும் பாடுபட்டு வருகிறீர்கள். இந்த புதிய பயணத்திற்கு அன்பான வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
You have always inspired us to climb higher and keep raising the bar. A warm welcome and best wishes for this new journey Sir 🙌🏼🙏 https://t.co/A8uAQljS1a
— Archana Kalpathi (@archanakalpathi) February 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments