அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜீவா நடித்த 'கீ', ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' உள்பட பல தமிழ்த்திரைப்படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இவர் திரைப்படங்கள் தயாரிப்பதுடன் கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இணைந்து ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவான இவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரனின் அமமுக மாறியபோது அமமுகவில் இணைந்தார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக வேட்பாளராக நெல்லையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்று மைக்கேல் ராயப்பன் அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். இவருடன் அமமுகவினர் 15 பேர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com