கொரோனாவால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிக்கலா???? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,July 18 2020]

 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் மூலமாகப் பரவும் எனப் பொதுமக்களிடம் அனைத்து நாட்டு சுகாதாரத்துறையும் கடுமையாக எச்சரித்து வருகிறது. இதனால் சமூக விலகலைக் கடைப் பிடுக்குமாறு பரிந்துரை செய்யப்படகிறது. மேலும் இதற்காக மாதக்கணக்கான உலக மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருந்து வருகிறோம். அதைத்தவிர சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்றவை கொரோனாவின் அறிகுறிகள் என மக்கள் மத்தியில் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளின் சுகாதார அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதைத் தொடர்ந்து கொரோனாவின் மரபணுவுடன் சேர்ந்து அது வெளிப்படுத்தும் தன்மைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது எனவும் கொரோனா புதுப்புது அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது எனவும் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டனர். அதனால் தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் கொரோனாவாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அடுத்து கால் விரல்களில் வீக்கம், எரிச்சல், சிவந்துபோதல், வயிற்று வலி போன்றவையும் கொரோனா அறிகுறி என எச்சரிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து பல எச்சரிக்கைகள் வருவதால் மக்கள் குழப்பம் அடைந்து வரும் நிலையும் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை, அவர்களின் தாய்ப்பாலிலும் கொரோனா வைரஸ் இருக்காது எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகின. நியுயார்க் பல்கலைக் கழகத்தின் தலைமை மருத்துவர் ஆதம் ராட்னட் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளின் சுவாசப் பாதையோடு குழந்தைகளுக்கு தொடர்பு ஏற்படாத வரை சிக்கல் இருக்காது. குழந்தை பிறக்கம்போதோ அல்லது கருவில் இருக்கும்போதோ கொரோனா வைரஸ் குழந்தைகளைத் தாக்க வாய்ப்பில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

இந்தியாவிலும் மும்பை மாநகரத்தில் உள்ள லோக்மான்யா திலக் மருத்துவமனையில் கொரோனா பாதித்த 115 கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் நடைபெற்றது. அவர்களில் பெரும்பலானவர்களுக்க மிக சுலபமாக பிரசவம் நடைபெற்றதாகவும் எந்தக் குழந்தைக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை எனவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால் தற்போது இப்படி நம்பிக்கை வைப்பதில் சிக்கல் இருக்கிறது என சில ஆய்வுகள் அச்சத்தை வெளிப்படுத்து கின்றன. இத்தாலியில் கொரோனா பாதித்த 31 பெண்களுக்கு பிரசவம் நடைபெற்றது என்றும் அவர்களின் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதும்தெரிய வந்திருக்கிறது. கடந்த மார்ச் – ஏப்ரல் மாதத்தில் பிரசவம் நடைபெற்றதாகவும் அவர்களின் நஞ்சுக்கொடி ரத்தம், நஞ்சுக்கொடி, மற்றும் தாய்ப்பாலிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு ஆய்விலும் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலகம் முழுவதும் கர்ப்பத்தின் கடைசி காலத்தில் தொற்று ஏற்பட்ட பெண்களைக் குறித்தே இதுவரை ஆய்வு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகளின் நஞ்சுக்கொடி, நஞ்சுக்கொடி ரத்தம் மற்றும் தாய்ப்பாலிலும் கொரோனா வைரஸ் பரவி அது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்பட்த்தி இருப்பதால் தற்போது விஞ்ஞானிகளின் மத்தியல் கடும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் கர்ப்பக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கும் முறையான பரிசோதனை மற்றும் எச்சரிக்கை தேவை என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

More News

'மாஸ்டர்' மாளவிகாவின் புத்தகம் படிக்கும் கிளாமர் போஸ்: குவியும் லைக்ஸ்கள்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும்

மடியில் கர்ப்பிணி மனைவி, ஆனால் முத்தம் மட்டும் வேறொருவருக்கு! வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நடாஷா என்ற நடிகையை திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்

போலீசார் முன் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை: வனிதா-சூர்யாதேவி சமாதானமா?

வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி மீது வனிதாவும், வனிதா தன்னை கஞ்சா வியாபாரி என்றும் தனக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக

பல வருடங்களுக்குப்பின்பு நாடு திரும்ப காத்திருக்கும் பெண்: கைது செய்ய முயற்சிக்கும் இங்கிலாந்து அரசு!!! பரபரப்பு சம்பவம்!!!

இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற ஷமிமா பேகம் (20) என்ற பெண் மாணவியாக இருக்கும்போது இங்கிலாந்தில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டதாகக் கூறப்படுகிறது

பார்வையற்ற முதியவருக்கு உதவிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!

கேரளாவில் பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிட பெண் ஒருவர் அங்குமிங்கும் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது குறித்த செய்தியை பார்த்தோம்.