தொடரும் மாயாவின் அடாவடி கேப்டன்சி.. ஃபார்ம் ஆகியது விசித்ரா குரூப்..!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டு மூன்று நாட்கள் ஆனாலும் இன்னும் அவரைப் பற்றி தான் பேச்சு நடைபெற்று வருகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் இல்லாத குறையை தற்போது அர்ச்சனா தீர்த்து வருகிறார் என்பதும் மாயா - பூர்ணிமா குரூப்புக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் என்பதையும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் விசித்திரா ’எனக்கு டூத் பிரஷ் பல் துலக்க வேண்டும்’ என்று கேட்க அதற்கு மாயா திமிராக பதில் சொல்கிறார். இதனால் அவரது கேப்டன்சியில் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

’விசித்ராவுக்கு டூத் பிரஸ் கொடுங்கள்’ என்று தினேஷ் பரிந்துரை செய்த போது ’கை இருக்குல்ல அதை வைத்து பிரஷ் பண்ண சொல்லுங்க’ என்று மாயா திமிராக கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை அவர் வஞ்சிப்பதாகவும் கருதப்படுகிறது. ’இது மிக மிக மோசமான கேப்டன்ஷிப்’ என்று ஆர்ஜே அர்ச்சனா கூற, ‘ஆமாம் நான் பயாஸ் கேப்டன் தான்’ என்று திமிராக அதற்கும் பதில் சொல்கிறார்.

இதனை அடுத்து மாயா ஸ்மால் ஹவுஸ் கேப் போட்டியாளர்களை ’உள்ளே வாங்க ’என்றழைக்க அதற்கு ’வர முடியாது’ என்று சைகையில் கூறுவதும் மாயாவை கடுப்பேற்றுகிறது. மொத்தத்தில் மாயா தனது கேப்டன்ஷிப்பில் போட்டியாளர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லாமல் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை எதிரி போல் பார்ப்பதால் அவர் மீதான மதிப்பு மரியாதையும் பார்வையாளர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது

அதுமட்டுமின்றி மாயா-பூர்ணிமா குரூப்பின் கொட்டத்தை அடக்க விசித்ரா, ஆர்ஜே அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் என ஒரு எதிர் குரூப்பும் ஃபார்ம் ஆகிவிட்டதாக தெரிகிறது.