யார் யாருக்கோ சண்டை… எதுக்கு உருட்டுறீங்க என் மண்டைய… வெதும்வும் ஹாங்காங்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

 

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வந்த அழுத்தம் தற்போது அரசியல் காரணங்களைத் தாண்டி பொருளாதாரத் தடையாகவும் மாறியிருக்கிறது. சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை, சீனச் செயலிகளுக்கு கட்டுப்பாடு எனத் தொடர்ந்து சீனாவிற்கு நெருக்கடிக் கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா சீனா இடையே இருக்கும் பனிப்போர் தற்போது ஹாங்காங்கின் விவகாரங்களில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர்.

தற்போது ஹாங்காங்கிற்கு அமெரிக்கா அரசு  இதுவரை வழங்கிவந்த சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் அறிக்கையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து இட்டு இருக்கிறார். மேலும் சீனாவின் பெரு நிலப்பரப்பு எப்படி நடத்தப்படுகிறதோ அதைப்போலவே இனிமேல் ஹாங்காங்கும் பாவிக்கப்படும் எனவும் அதிபர் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். சீனா அமெரிக்காவிடையே நடந்து வரும் அரசியல் அழுத்தங்களில் தற்போது ஹாங்காங் கடுமையாக பாதிக்கப்படும் நிலைமை உருவாகி இருக்கிறது.

இந்நிலைமைக்கு காரணம் சீனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாங்காங் பகுதிக்கான பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டத் திருத்தம் பற்றிய அறிக்கை வெளியான போது ஹாங்காங்கின் சுயாட்சி உரிமை பறிக்கப் படுவதாக அமெரிக்க அதிபர் கூட கடுமையாக விமர்சனத்தை வைத்து இருந்தார். சுயாட்சி உரிமை இல்லாமல் ஹாங்காங்கின் பாதுகாப்பு சட்டத்திருத்தத்தில் இப்படி சீனா மாற்றங்களைக் கொண்டு வரக்கூடாது என ஹாங்காங் மக்கள் பல ஆண்டுகளாகவே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக இப்பேராட்டங்கள் அமைதி பெற்றிருந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தில் ஹாங்காங் பாதுகாப்பு சட்டத் திருத்தம் எதிர்ப்புகள் இன்றி கையெழுத்தாகியது.

முன்னதாக ஹாங்காங் பகுதி முழுவதும் பிரிட்டன் அரசின் கீழ் பல ஆண்டுகளாக காலனியப் பகுதியாக இருந்து வந்தது. பிரிட்டனின் காலனியம் முடிவுக்கு வந்தபோது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆனாலும் சீனாவின் பிராந்தியப் பகுதியைப் போலல்லாமல் பிரிட்டன் அரசுக்கும் ஹாங்காங் மக்களுக்கும் தனி உரிமைகள் இருக்குமாறு பல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அப்படி 1984 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் சீனாவிற்கு இடையே ஹாங்காங் பாதுகாப்பு குறித்து போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சீனாவின் தற்போதைய நடவடிக்கை அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டத் தொடங்கி இருக்கின்றனர்.

ஹாங்காங் பாதுகாப்பு குறித்து தற்போது சீனா கொண்டு வந்துள்ள பாதுகாப்பு சட்டத் திருத்தத்தால் பிரிட்டனுக்கு ஹாங்காங் மீது இருந்த உரிமைகள் எதுவும் இல்லாமல் ஆக்கப்படும். ஹாங்காங் பகுதியில் பிரிட்டன் அரசின் உரிமைகள் இல்லாமல் ஆக்கப்படுவதால் அமெரிக்காவிற்கும் ஹாங்காங்கிற்கும் இருந்து வந்த பல ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிடும். இதனால் பல கோடி கணக்கான வர்த்தகங்கள் கூட நின்றுபோவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹாங்காங்கிற்கு அமெரிக்கா கொடுத்து வந்த சிறப்பு அந்தஸ்து காரணமாக அமெரிக்கர்கள் விசா இல்லாமலே ஹாங்காங்கிற்கு சென்று வந்தனர்.

அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ் ரத்து முடிவால் இனிமேல் ஹாங்காங்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த வர்த்தகம் முதற்கொண்டு அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். ஹாங்காங்கின் உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா அதி வரியை விதிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஹாங்காங் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் அமெரிக்கா கெடுபிடி காட்டலாம். அதைத்தவிர பிரிட்டனுக்கும் இந்த விவகாரத்தில் சற்று மனஸ்தாபம் இருப்பதால் என்ன நடக்குமோ என்ற பீதியும் இருக்கத்தான் செய்கிறது.

More News

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: தற்போதைய நிலைமை என்ன???

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்தின்

தந்தையின் முத்த வீடியோ: பீட்டர்பால் மகன் கேட்ட அதிர்ச்சி கேள்வி

கடந்த சில நாட்களாகவே வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

நம்ம ஊரு மஞ்சள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுகிறதா??? ஆய்வு முடிவு வெளியிட்ட விஞ்ஞானிகள்!!!

சென்னை ஐஐடியின் உயிரி தொழில் நுட்பத் துறையின் ஆராய்ச்சி குழு புற்றுநோயைக் குணப்படுத்துவதில் மஞ்சள் சிறந்த பங்களிக்கிறது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறது.

நாலு லைக்கு, எட்டு ஷேருக்கு இப்படியெல்லாம் பேசாதிங்க: சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கந்தசஷ்டி விவகாரம் பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும், கந்தசஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்ட நபருக்கு கண்டனம்

பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவியை பெற்ற தனுஷ் தந்தை

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் கட்சியில் ஒருசில அதிரடி மாற்றங்கள் செய்ததோடு, புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார்