இந்த எச்சைகள் எனக்கு தேவையே இல்லை. பிக்பாஸில் பொங்கிய காயத்ரி ரகுராம்
- IndiaGlitz, [Wednesday,June 28 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி இப்போதுதான் சுவாரஸ்யத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேட்டுக்கான நாமினேஷன், ஆர்த்தி, காயத்ரி ரகுராமால் ஜூலி கட்டம் கட்டப்பட்டது ஆகிய பரபரப்பான சம்பவங்கள் நடந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் டீசர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காயத்ரி ரகுராம் கோபமாக 'இதற்குத்தான் இந்த எச்சைகளோட நான் வரமாட்டேன்னு சொன்னேன்' என்று கூற அதற்கு கணேஷ் வெங்கட்ராமன் உள்பட பலர் தேவையில்லாமல் வார்த்தையை விட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்க, 'எனக்கு இந்த நிகழ்ச்சி தேவையே இல்லை நான் இதுக்குத்தான் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்னு சொன்னேன், யார் இவங்க, என்று காயத்ரி கூற அந்த 30 வினாடி டீசரில் ஒரே பரபரப்புதான்.
மேலும் இன்னொரு பக்கம் வையாபுரி தேம்பி தேம்பி அழுவதும் அவரை ஜூலி தேற்றுவதுமாக உள்ளது. இந்த டீசரை வைத்து பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யம் மற்றும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.