முரண்டு பிடிக்கும் மும்தாஜால் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் அந்த வீட்டையே இரண்டாக பிரித்துவிடும் போல் தெரிகிறது. வேலைக்காரி டாஸ்க்கால் அதிகம் கடுப்பானாவ்ர்கள் மும்தாஜ் மற்றும் மமதியும் தான். இருவரும் சரியாக வேலைக்காரி வேலையை செய்யாததால் இருவருக்கும் தண்டனை அளிக்கப்படுகிறது.
மும்தாஜ் நீச்சல் குளத்தை கழுவ வேண்டும் என்றும், மமதி ஒருநாள் முழுவதும் பேசாமல் இருக்க வேண்டும் என்றும் தண்டனை வழங்கப்படுகிறது. மமதி தண்டனையை ஏற்றுக்கொண்டாலும் மும்தாஜ் தண்டனையை ஏற்க மறுக்கின்றார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தன்னிடம் பேசும் வரை மைக்கை மாட்ட மாட்டேன் என்றும் முரண்டு பிடிக்கின்றார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைவி நித்யாவின் வேண்டுகோளை ஏற்று மும்தாஜ் மைக்கை மாட்டி கொண்டாலும் தண்டனையை ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளார். இதனால் இந்த டாஸ்க்கின் 1600 லக்சரி பாயிண்டுக்கள் இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் குறித்து ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்களிடையே நீண்ட விவாதம் நடக்கின்றது. ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஆண்களுக்கு ஆதரவாகவும், மற்றவர்கள் எதிர்ப்பாகவும் விவாதம் செய்தனர்.
இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் இரவு நடனப்போட்டி நடக்கின்றது. இந்த போட்டியில் பெண்கள் நடனமாட வேண்டும், யார் நன்றாக நடனமாடினார்கள் என்பதை ஆண்கள் கணிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. எதிர்பார்த்தபடி ஆண் போட்டியாளர்களின் செல்லப்பிள்ளையான ஐஸ்வர்யாவுக்கு பரிசு கிடைக்கின்றது. மேலும் போனால் போகிறது என்று மும்தாஜ், நித்யாவுக்கும் பரிசுகள் அளிக்கபடுகிறது.
இந்த வாரம் நித்யா தலைவி என்று பெயரளவுக்குத்தான். எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் காரணமாக வேலைகளும் பிரித்து கொடுக்கவில்லை, தலைவியின் அதிகாரத்தையும் அவரால் பயன்படுத்த முடியவில்லை. எவிக்சனில் இருந்து தப்பினார் என்ற ஒரே ஒரு ஆதாயம் மட்டுமே நித்யாவுக்கு கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் தொடரும் என்றும், சனி, ஞாயிறு அன்று இந்த டாஸ்க் குறித்து கமலிடம் விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன ஒரு இசை?! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/sn12JYXZTH
— Vijay Television (@vijaytelevision) June 27, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments