முரண்டு பிடிக்கும் மும்தாஜால் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை

  • IndiaGlitz, [Thursday,June 28 2018]

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் அந்த வீட்டையே இரண்டாக பிரித்துவிடும் போல் தெரிகிறது. வேலைக்காரி டாஸ்க்கால் அதிகம் கடுப்பானாவ்ர்கள் மும்தாஜ் மற்றும் மமதியும் தான். இருவரும் சரியாக வேலைக்காரி வேலையை செய்யாததால் இருவருக்கும் தண்டனை அளிக்கப்படுகிறது. 

மும்தாஜ் நீச்சல் குளத்தை கழுவ வேண்டும் என்றும், மமதி ஒருநாள் முழுவதும் பேசாமல் இருக்க வேண்டும் என்றும் தண்டனை வழங்கப்படுகிறது. மமதி தண்டனையை ஏற்றுக்கொண்டாலும் மும்தாஜ் தண்டனையை ஏற்க மறுக்கின்றார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தன்னிடம் பேசும் வரை மைக்கை மாட்ட மாட்டேன் என்றும் முரண்டு பிடிக்கின்றார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைவி நித்யாவின் வேண்டுகோளை ஏற்று மும்தாஜ் மைக்கை மாட்டி கொண்டாலும் தண்டனையை ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளார். இதனால் இந்த டாஸ்க்கின் 1600 லக்சரி பாயிண்டுக்கள் இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் குறித்து ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்களிடையே நீண்ட விவாதம் நடக்கின்றது. ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஆண்களுக்கு ஆதரவாகவும், மற்றவர்கள் எதிர்ப்பாகவும் விவாதம் செய்தனர்.

இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் இரவு நடனப்போட்டி நடக்கின்றது. இந்த போட்டியில் பெண்கள் நடனமாட வேண்டும், யார் நன்றாக நடனமாடினார்கள் என்பதை ஆண்கள் கணிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. எதிர்பார்த்தபடி ஆண் போட்டியாளர்களின் செல்லப்பிள்ளையான ஐஸ்வர்யாவுக்கு பரிசு கிடைக்கின்றது. மேலும் போனால் போகிறது என்று மும்தாஜ், நித்யாவுக்கும் பரிசுகள் அளிக்கபடுகிறது.

இந்த வாரம் நித்யா தலைவி என்று பெயரளவுக்குத்தான். எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் காரணமாக வேலைகளும் பிரித்து கொடுக்கவில்லை, தலைவியின் அதிகாரத்தையும் அவரால் பயன்படுத்த முடியவில்லை. எவிக்சனில் இருந்து தப்பினார் என்ற ஒரே ஒரு ஆதாயம் மட்டுமே நித்யாவுக்கு கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் தொடரும் என்றும், சனி, ஞாயிறு அன்று இந்த டாஸ்க் குறித்து கமலிடம் விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? பசுமை சாலை குறித்து கார்த்தி

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்புகளை மீறி அரசு இந்த சாலை அமைப்பதில் தீவிரமாக உள்ளது.

ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏற்ற தலைவன் அல்ல: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்த பின்னர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சி தலைவர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

'செம போத ஆகாதே' படத்தின் ரன்னிங் டைம்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் 'விஸ்வரூபம் 2' பாடல் குறித்த முக்கிய தகவல்

கமல்ஹாசன் நடித்து, இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது

தமிழக அரசுக்கு ஒரே கோரிக்கையை வைத்த கமல்-விஷால்

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நேற்று சென்னை அருகேயுள்ள பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்று அங்கு கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் இல்லங்களை பார்வையிட்டார்